மஹிந்த அணியில் முஸ்லிம் எம்பி யார்? உச்சத்தை அடைந்தது போட்டி » Sri Lanka Muslim

மஹிந்த அணியில் முஸ்லிம் எம்பி யார்? உச்சத்தை அடைந்தது போட்டி

mahinda

Contributors
author image

A.H.M.Boomudeen

நான் – கடந்த ஓரிரு நாட்களுக்குள் எழுதிய செய்தியொன்று தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவதானம் செலுத்தியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு இல்லத்தில் நேற்று – குறித்த எனது செய்தி முழுமையாக வாசித்துக் காண்பிக்கப்பட்டுள்ளது.

அப்போது , மஹிந்தவுடன் – அவரது அணியைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல் பிரமுகர் ஒருவரும் – மற்றொரு தமிழ் பேசும் பிரமுகரும் இருந்துள்ளனர்.

முஸ்லிம் அரசியல் பிரமுகரே – அந்த செய்தியை முழுமையாக வாசித்துக் காட்டியுள்ளார்.

” பூமுதீன் என்பவரிடம் – எதற்காக அவர் இவ்வாறு தகவலை கொடுத்தார் ? என கேள்வி எழுப்பிய மஹிந்த , இப்போதைய நிலையில் எனக்கு அணைவரும் வேண்டும் . நான் பொதுவான நபர் ” என்றும் கூறியுள்ளார்.

பின்னர் – குறித்த முஸ்லிம் அரசியல் பிரமுகர் – அந்த செய்தியை வழங்கிய நபருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி , இந்த தகவலை நீங்கள் யாரென்று கூறாமல் வழங்கியிருக்கலாம் என்றாராம்.

மஹிந்த அணியில் இருக்கின்ற செல்வாக்குமிக்க இரண்டு முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் தான் இவர்கள்.

மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வர் எம்பியின் வெற்றிடத்தை இவர்களில் ஒருவரைக் கொண்டு நிரப்பவே மஹிந்த எதிர்பார்த்துள்ளதாக அரசியல் அரங்கில் பரவலாக பேசப்பட்டும் எதிர்பார்க்கப்பட்டும் வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Web Design by The Design Lanka