மஹிந்த அரசாங்கத்திற்கு முக்கியம் பொது மக்கள் அல்ல கெசினோ காரர்களே! – ஹர்ச! - Sri Lanka Muslim

மஹிந்த அரசாங்கத்திற்கு முக்கியம் பொது மக்கள் அல்ல கெசினோ காரர்களே! – ஹர்ச!

Contributors

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் சமர்பிக்கப்பட்டுள்ளது -கெசினோவை விரும்பும் மக்களுக்கு துரோகம் செய்யும் வரவு-செலவுத் திட்டம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் சுகபோக கெசினோ வர்க்கத்தினருக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதென கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

´லெம்போகினியில் செல்லும் கள்ள கெசினோ காரர்களுக்கு இம்முறை வரவு-செலவுத் திட்டத்தில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களைவிட கெசினோ காரர்கள் இந்த அரசாங்கத்திற்கு முக்கியமாகி விட்டனர்.

வெட்கமின்றி விவசாயிகள் பற்றி பேசும் அரசாங்கம் வரவு-செலவுத் திட்டத்தில் வழங்கியுள்ளது விவசாய ஓய்வூதிய கொடுப்பனவு இல்லை.

இனி தொலைபேசிக்கு செய்யப்படும் 100 ரூபா மீள்நிரப்பு (ரீலோட்) நடவடிக்கையின் போது 25 ரூபா ராஜபக்ஷவிற்கு செல்லும். 75 ரூபா மாத்திரமே உரிய நபருக்கு கிடைக்கும்.

இலங்கை போன்று உணவுக்கு வரி விதிக்கும் நாடு உலகில் வேறெங்கும் இல்லை. சில உணவு பொருட்களுக்கு 1 டொலருக்கு 800 ரூபா வரை வரி விதிக்கப்படுகிறது.

பால் உற்பத்தியாளர்கள் குறித்து ஜனாதிபதி நல்ல கதை கூறியுள்ளார். பால் உற்பத்தியாளர்களுக்காக 20,000 பசு மாடுகள் இறக்குமதி செய்யப்படும். ஒரு பசுமாடு 8 லட்சம் பெறுமதியாகும் என்று கூறியுள்ள ஜனாதிபதி, அதற்கு எவ்வித நிதியும் ஒதுக்கவில்லை.

நிவாரண குறைப்பை இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி வருகிறது´ என ஹர்ச டி சில்வா தெரிவித்தார்.

அத தெரண

Web Design by Srilanka Muslims Web Team