மஹிந்த ராஜபக்சவுக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிக்கின்றேன் - ஹரீஸ் MP - Sri Lanka Muslim

மஹிந்த ராஜபக்சவுக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிக்கின்றேன் – ஹரீஸ் MP

Contributors

-எம்.எம்.எஸ்.ஸிஹாப், எம்.எம்.ஜபீர்-

(ML)
2020ஆம் ஆண்டில் இலங்கையில் வறுமையை இல்லாதொழிப்பதற்காக திவிnகும திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக செயற்பட்ட அதிமேதகு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில்ராஜபக்ஷ ஆகியோர்களுக்கும், அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிக்கின்றேன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.சம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

 

திவிநெகும திணைக்களம் இன்று சம்பிரதாயமாக ஆரம்பிக்கப்டுவதை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்திலும் அங்குரார்ப்பண வைபவம் இடம்பெற்றது. இதன்போது விஷேட துஆப் பிரார்த்தனை மற்றும் மாணவர்களுக்கான சிசுதிரிய புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு என்பனவும் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

 

சாய்ந்தமருது பிரதேச செயலக மகாசங்க முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.றிபாயா தலைமையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.சம்.எம்.ஹரீஸ், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீட், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.ஏ.நஜீம் உள்ளிட்ட மேலும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

 

 

Web Design by Srilanka Muslims Web Team