மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையை நீக்குவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை..! - Sri Lanka Muslim

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையை நீக்குவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை..!

Contributors

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையை நீக்குவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் (Dr. Hemantha Herath) இதனை தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு அது தொடர்பில் மீளாய்வு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாடு திறக்கப்பட்டுள்ளமையால் ஏற்படக்கூடிய தொற்று நிலை குறித்து எதிர்வரும் இரண்டு வாரங்களின் பின்னரே கண்டறியப்படும்.

கொவிட் ஒழிப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 55 வீதமானோருக்கு முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இதனிடையே, மாவட்ட ரீதியில் அதிகளவானோர் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team