மாகாணசபைத் தேர்தல்கள் மார்ச் 29ல் - Sri Lanka Muslim
Contributors

உத்தேசிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி நடத்தப்படும் என்று, அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மாத்தரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இந்த ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மார்ச் மாதம் 29ம் திகதி இந்த மாகாணகளின் தேர்தல்கள் நடைபெறும்.

இதில் அரசாங்கம் நிச்சயமாக வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டை கருதியே அரசாங்கம் மார்ச் மாதம் தேர்தலை நடத்த முற்படுவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா மாநாட்டில் அரசாங்கம் சந்திக்கவுள்ள சவால்கள் மீதான அவதானத்தில் இருந்து பொது மக்களை திசை திருப்பும் வகையில் இந்த தேர்தல்கள் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.(sooriyanfm)

Web Design by Srilanka Muslims Web Team