மாகாணசபை எல்லை நிர்ணய அறிக்கை புதன்கிழமை கையளிக்கப்படும் » Sri Lanka Muslim

மாகாணசபை எல்லை நிர்ணய அறிக்கை புதன்கிழமை கையளிக்கப்படும்

faizar-musthafa

Contributors
author image

Editorial Team

மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் புதன்கிழமை அரசாங்கத்திடம் கையளிப்பதாக அதற்கென நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் கே.தவலிங்கம் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை காலை இந்த அறிக்கை அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்படும். மாகாணசபைகள் எல்லைகளை நிர்ணயம் செய்வதற்காக கடந்த ஒக்டோபர் ஐவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. நான்கு மாத காலத்தில் அது பற்றிய அறிக்கையை அரசாங்கத்திடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka