மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க பதவியேற்பு..! - Sri Lanka Muslim

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க பதவியேற்பு..!

Contributors
author image

Editorial Team

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று ( 02) முற்பகல் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கொழும்பிலுள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சில் இந்நிகழ்வு இடம்பெற்றது. மஹாசங்கத்தினரது ஆசீர்வாதத்திற்கு மத்தியில் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தனது அமைச்சின் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்.

குறித்த நிகழ்வில் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.டீ.ஏ.பீ.பொரலெஸ்ஸ உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team