மாகாண சபை தேர்தல்களில் பிளாஸ்டிக் வாக்குபெட்டிகள் குறித்து ஆராய்வு - பெப்ரல் » Sri Lanka Muslim

மாகாண சபை தேர்தல்களில் பிளாஸ்டிக் வாக்குபெட்டிகள் குறித்து ஆராய்வு – பெப்ரல்

Contributors

எதிர்வரும் தினத்தில் இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தல்களில் வெளிப்புறத்தில் தெரியும் பிளாஸ்டிக் வாக்குபெட்டிகளை பயன்படுத்துவது தொடர்பில் தேர்தல்கள் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளதாக பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி இவ்வாறு குறிப்பிட்டார்.

சர்வதேச நாடுகள் தற்போது இவ்வாறான வாக்கு பெட்டிகளையே பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த தேர்தலில் போது கடந்த தேர்தலை போல் பிளாஸ்டிக் வாக்கு பெட்டிகளை தேர்தல்கள் செயலகம் பயன்படுத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்;டதன் நன்மைகளை கருத்தில் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.

முன்னர் இடம்பெற்ற வடமேல் மற்றும் வடமத்திய மாகாண சபை தேர்தல்களில் தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு மத்திய நிலையங்களில் பலவற்றில், முதற் தடவையாக இவ்வாறான வெளிப்புறத்தில் தெரியும் பிளாஸ்டிக் வாக்குபெட்டிகள் பல பரீட்சார்த்தமாக பயன்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் இது தொடர்பில் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்ணாயக்கவிடம் எமது செய்தி சேவை வினவியது.

எதிர்வரும் மாகாண சபை தேர்தல்களில் இவ்வாறான பிளாஸ்டிக் வாக்கு பெட்டிகளை பயன்படுத்துவது தொடர்பில் இதுவரையிலும் இறுதி தீர்மானத்திற்கு வரவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.sfm)

Web Design by Srilanka Muslims Web Team