மாகாண சபை தேர்தல் பழைய முறையில் வேண்டும்;மனோ - Sri Lanka Muslim

மாகாண சபை தேர்தல் பழைய முறையில் வேண்டும்;மனோ

Contributors

நாட்டில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமாயின், பழைய முறையிலேயே நடத்தப்பட வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவிக்கின்றார்

ஊடகமொன்றுக்கு இன்று கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, எந்த முறையில் தேர்தல் இடம்பெற்றாலும், அதில் சிக்கல்கள் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதன்போது குறிப்பிட்டார்.

இதேவேளை, சிறுபான்மை மக்கள் ஒன்றிணைவதின் ஊடாக மாத்திரமே, எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிர்வாகத்தை சிறுபான்மையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் M.L.A.M ஹிஸ்புல்லா தெரிவிக்கின்றார்.

ஏறாவூர் -மிச்நகர் பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அதேபோல மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முன்னர், தேர்தலை ஒருபோதும் நடத்த முடியாது என அமைச்சர் திணேஸ் குணவர்தன தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டை இயக்குவதற்கு மாகாண சபை தேவையில்லை என்ற நிலைப்பாடொன்றை உருவாக்க, தென் இலங்கையைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் முயற்சித்து வருவதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவிக்கின்றார்

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team