"மாடறுப்பை தடைசெய்ய, முஸ்லிம் Mp பிக்கள் உதவ வேண்டும்"..! - Sri Lanka Muslim

“மாடறுப்பை தடைசெய்ய, முஸ்லிம் Mp பிக்கள் உதவ வேண்டும்”..!

Contributors

அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி  அரசாங்கத்தை நோகாமல் பார்த்துக்கொண்ட 20க்கு கையுயர்த்திய அனைத்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்   எம்.பிக்களும்  இந்த மாடு அறுப்பினை தடைசெய்யும் சட்டமூலத்தையும் அரசாங்கத்தோடு தோளோடு தோள் நின்று நிறைவேற்றிக் கொடுத்திட வேண்டும என கிழக்கு மாகாண சபையின்முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.தவம் கிண்டல் செய்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மாடு அறுப்பை தடைசெய்ய அரசிற்கு உதவுங்கள் தவறினால்  இவ் எம்.பிக்களுக்கு மௌத்தானாலும் கடனாக விடும், 

மாடு அறுப்பை தடைசெய்யும் சட்டமூலத்திற்கு  சட்டமா அதிபர்   அனுமதி. அளித்துள்ளார்

அடுத்த அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

எதிர்வரும் மாதம் பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்படுகிறது.

நன்றி ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்‌ஷ

நன்றி பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ

நன்றி  நிதி அமைச்சர் பஷில் ராஜபக்‌ஷ

ஜனாஸாக்கள் எரிப்பு 

வெள்ளவத்தையில் 15,000 குர்ஆன் பிரதிகளை கைப்பற்றல்

புர்காவை தடைசெய்தல்

முஸ்லிம் அரசியல்வாதிகளை கைதுசெய்தல்

முஸ்லிம் சட்ட / மார்க்க புலமையாளர்களை கைதுசெய்தல்

தீவிரவாதத்தோடு சம்மந்தப்படாத இஸ்லாமிய அமைப்புக்களையும் தடைசெய்தல்

இஸ்லாமிய நூல்களை கொண்டு வருவதை தடைசெய்தல்

 எல்லை நிர்ணயக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதியை உள்வாங்காமை

 விவாக விவாகரத்து சட்டத்தை அழிக்கும் அமைச்சரவை தீர்மானம்

மத்ரசாக்களை தடைசெய்ய முயற்சி 

நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்காமல் புனர்வாழ்வு என்ற பெயரில் எவரையும் கைது செய்து இரண்டு வருடங்கள் தடுத்து வைக்கும் சட்டம் நிறைவேற்றம்

தேர்தல் முறைமை தொடர்பான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் மு.காவை உள்வாங்காமை போன்றவற்றில்

அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி  அரசாங்கத்தை நோகாமல் பார்த்துக்கொண்ட – 20க்கு கையுயர்த்திய  நீங்கள்  இந்த மாடு அறுப்பினை தடைசெய்யும் சட்டமூலத்தையும் அரசாங்கத்தோடு தோளோடு தோள் நின்று நிறைவேற்றிக் கொடுத்திடுங்கள்.

அதனூடாக தலைவர் அஷ்ரபின் ஆன்மாவை குளிர வையுங்கள். 

இதற்காகத்தான் தனித்துவ அரசியல் சிந்தாந்தத்தை அவர் உருவாக்கினார்.

இதற்காகவே மரணித்தார்.

மறந்துவிடாதீர்கள்!

இந்த மாடு அறுப்பினை தடைசெய்யும் சட்டமூலத்தை நீங்கள் நிறைவேற்றிக்கொடுக்காது விட்டால் அது நீங்கள் மௌத்தான பின்னரும் கடனாக அமையும்.

Web Design by Srilanka Muslims Web Team