மாத்தறை இஸ்ஸதீன் நகரிலுள்ள பள்ளிவாசலுக்கு தேரர்கள் அச்சுறுத்தல் - Sri Lanka Muslim

மாத்தறை இஸ்ஸதீன் நகரிலுள்ள பள்ளிவாசலுக்கு தேரர்கள் அச்சுறுத்தல்

Contributors
author image

Editorial Team

மாத்தறை இஸ்ஸதீன் நகரிலுள்ள பள்ளிவாசலை உடனடியாக மூடாவிட்டால் அங்கு வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களை அங்கிருந்து இரவோடு இரவாக வெளியேற்றுவோம் என அப்பகுதி பௌத்த தேரர்கள் சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

அத்துடன் இஸ்ஸதீன் நகரிலுள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரித்து அவற்றையும் அங்கிருந்து அகற்றுவோம் என எச்சரித்துள்ளனர்.

 

இஸ்ஸதீன் நகர பள்ளிவாசல் சர்ச்சை தொடர்பிலான கூட்டமொன்று மாத்தறை மாவட்ட செயலகத்தில் புத்தசாசன, சமய விவகார அமைச்சின் செயலாளர் எம்.கே.டி.எஸ்.திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற போத தேரர்கள் மிகவும் சூடாக கீழ்த்தரமான வார்த்தைகளுடன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

 

குறித்த பகுதியில் 13 முஸ்லிம் குடும்பங்களே வாழ்ந்து வருவதால அங்கு பள்ளிவாசலொன்று தேவைதானா என்றும் தேரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

பள்ளிவாசலை உடனடியாக மூடாவிட்டால் அங்கிருக்கும் முஸ்லிம் குடும்பங்களை வெளியேற்றுவோம். அதன் பிறகு அப்பள்ளிவாசல் செயலிழந்து விடும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

இப்பள்ளிவாசல் 2008ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட அதேவேளை 2012ஆம் ஆண்டு வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

எனினும் தேரர்களின் வற்புறுத்தலின் பேரில் இப்பள்ளிவாசலை மூடு விடுமாறு அண்மையில் புத்தசாசன அமைச்சின் செயலாளர் எழுத்து மூலம் உத்தரவிட்டிருந்தார்.

 

இக்கட்டளையை மேலும் தாமதிக்காமல் உடனடியாக அமுல்படுத்துமாறு தேரர்கள் போர்ர்கொடி தூக்கியுள்ளனர். இல்லையேல் முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேற்றுவோம் என்று அக்கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது பெரும் வாக்குவாதம் இடம்பெற்றது.

 

இந்த கூட்டத்தில் மாத்தறை மாவட்ட செயலாளர், முஸ்லிம் சமய விவகார திணைக்கள பணிப்பாளர், இஸ்ஸதீன் நகர விகாராதிபதி, பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பெரும் தொகையான தேரர்களும் கலந்து கொண்டனர்.

 

இதன்போது தேரர்கள் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மீது கண்டனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்ததுடன் தூஷண வார்த்தைகளையும் பிரயோகித்தனர். இதனைத் தொடர்ந்து முஸ்லிம் தரப்பினர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

 

masjidul-thaqwa01

 

masjidul-thaqwa02

Web Design by Srilanka Muslims Web Team