மாத்தறை நகரத்தை, வர்த்தகம் மற்றும் உல்லாச நகரமாக அபிவிருத்தி செய்ய பிரதமர் நடவடிக்கை. - Sri Lanka Muslim

மாத்தறை நகரத்தை, வர்த்தகம் மற்றும் உல்லாச நகரமாக அபிவிருத்தி செய்ய பிரதமர் நடவடிக்கை.

Contributors

மாத்தறை நகரம் வர்த்தக மற்றும்
உல்லாச நகரமாக அபிவிருத்தி
செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை வழங்கியுள்ளார்.


மாத்தறை நகர
நிர்வாக நகரமாக கொடவில பிரதேசத்தை கட்டியெழுப்புமாறும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.மாத்தறை புதிய நகரம், அகுரஸ்ஸ, தெவிநுவர, திக்குவல்லை, கம்புறுப்பி
டிய, கிரிந்தை புகுல்வல், திஹகொட மற்றும் வெலிகம ஆகிய நகரங்கள்
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப் படுத்தப்படவுள்ள செயற்
திட்டங்களின் பிரச்சினைகள் பற்றி பாராளுமன்ற குழு அறையில் அண்மையில்
கலந்துரையாடல் இடம்பெற்றபோதே
பிரதமர் மேற்படி வேண்டுகோளை
விடுத்தார்.மாத்தறைமாவட்டத்தில் 17 உள்ளூ
ராட்சிமன்றங்கள் உள்ளன.

இவற்றுள் 7
உள்ளூராட்சி மன்றங்கள் முதற்தர நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2021/- 2030 வரையிலான காலப்பகுதிக்குள்
அபிவிருத்தி செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.இதன் கீழ் மாத்தறை நகர சபை, மாத்தறை பிரதேச சபை, வெலிகம நகர சபை, வெலிகம
பிரதேச சபை, தெவிநுவர, ஹக்மன மற்றும் மாலிம்பட பிரதேச சபைகளுக்
குட்பட்ட பிரதேசங்கள் அபிவிருத்தி
செய்ய நகர அபிவிருத்தி அதிகார சபைஅதிகாரிகளினால் செயற்திட்டங்கள்
முன்வைக்கப்பட்டன.


நில்வளாகங்கையின் இரு கரையோரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள சடட
விரோத கட்டடங்களால் அபிவிருத்தி
நடவடிக்கைகளுக்குத் தடை ஏற்பட்
டுள்ளதாக அதிகாரிகளினால் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டன.


கடந்தஆட்சிக் காலத்தில் இடை
நிறுத்தப்பட்டிருந்த மாத்தறை மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டற்களை
மீண்டும் ஆரம்பிக்குமாறு அபிவிருத்தி
அதிகார பணிப்பாளருக்கு பிரதமர்
ஆலோசனை வழங்கினார்.குறிப்பாக மாத்தறை வைத்தியசாலை
யில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவை மாத்திரம் வேறுபடுத்தி, ஏனைய சகல பிரிவுகளையும் கொடவிலவில் நிறுவப்
படவுள்ள புதிய வைத்தியசாலைக்கு
இடமாற்றம் செய்வது பற்றியும் இதன் போது கலந்துரையாடப்பட்டன.


கொடகம – கம்புறுப்பிட்டிய வரை
பிரதான வீதியில்நான்கு வழிப்பாதைகளும் கம்புறுப்பிட்டிய – கொடவிலவரை
இரண்டு வழிப்பா
தைகளையும் அபி
விருத்தி செய்ய
நெ டு ஞ ்சாலைக ள்
அமைச்சர் ஜொன்ஸ்
டன் பெர்னாந்து
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


இந்நிகழ்வில் மின்சக்தி அமைச்சர்
டலஸ் அழகப் பெரும கருத்துத் தெரி விக்கையில்,கொடவிலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய நீதிமன்றக் கட்டடத்தை இன்னும் சிலதினங்களில்
திறந்து வைக்கமுடியுமென தெரிவித்தார்.


அதில் சகலவசதிகளும் கொண்ட
சட்டத்தரணிகள் அலுவலகமும்
அமையப் பெறவேண்டுமென பிரதமர் ஆலோசனை வழங்கினார்.


மேலும் மாத்தறைமஹிந்த ராஜபக்ஷ கல்லூரி 700 மில்லியன் ரூபாசெலவில் அமைக் கப்படவிருந்த கட்டட
பணிகள் கடந்தஅரசாங்கத்தில் இடைநிறுத்தப்படிருந்தன.


அதனால் அதிலுள்ள உபகரணங்கள் சேதம் அடைந்
துள்ளதென அமைச்சர்
டலஸ் அழகப் பெரும
இதன்போது சுட்டிக்
காட்டினார்.நாளாந்தம் மாத்தறை மற்றும் வெலிகம நகரங்களில் சேகரிக்கப்படும் 80 தொன் கழிவுகளை ஒன்றுசேர்த்து எதிர்கா
லத்தில் மின் உற்பத்தி செய்ய கவனம் செலுத்தியுள்ளதாக டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.


இதில், சபாநாயகர் மஹிந்தயாப்பா
அபேவர்தன, அமைச்சர்களான டலஸ்அழகப் பெரும, ஜொன்ஸ்டன் பெர்
னாந்து, இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மாத்தறை மாவட்ட பாரா
ளுமன்றஉறுப்பினர்களான நிபுணரண
வக்க, கருணாதாஸ கொடித்துக்கு, பிரதமரின் செயலாளர் காமினிசெனரத் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team