மாத இறுதியில் பீரிஸ் இந்தியாவுக்கு விஜயம் - Sri Lanka Muslim

மாத இறுதியில் பீரிஸ் இந்தியாவுக்கு விஜயம்

Contributors

வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல். பீரிஸ் இம்­மாதம் 28ஆம் திக­தி­ய­ளவில் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு இந்­தியா செல்­ல­வுள்ளார். இரண்டு நாடு­க­ளுக்கு இடையில் மீனவர் விவ­காரம் சூடு பிடித்­துள்ள நிலை­யிலும் எதிர்­வரும் மார்ச் மாதம் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைப் பேர­வையின் 25 ஆவது கூட்டத் தொடர் நடை­பெ­ற­வுள்ள நிலை­யி­லுமே வெளி­வி­வ­கார அமைச்­சரின் இந்­திய விஜயம் அமைந்­துள்­ளது.

இந்­திய விஜ­யத்­தின்­போது வெளி­வி­வ­கார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இந்­திய பிர­தமர் கலா­நிதி மன்­மோகன் சிங் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் ஆளும் கூட்­ட­ணியின் முக்­கி­யஸ்­தர்கள் எதிர்க்­கட்­சி­யான பார­திய ஜனதாக் கட்­சியின் முக்­கிய தலை­வர்கள் ஆகி­யோரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.

இந்த சந்­திப்­புக்­க­ளின்­போது இலங்கை இந்­திய மீனவர் விவ­காரம் மற்றும் இலங்­கையின் அர­சியல் தீர்வு விடயம் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. குறிப்­பாக யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் இலங்­கையில் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் வேலைத்­திட்­டங்கள் குறித்து இந்­திய தரப்­புக்கு விளக்­க­ம­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

இந்­திய மீன­வர்கள் கைது விவ­காரம் தொடர்பில் தமி­ழ­கத்­தினால் இந்­திய மத்­திய அர­சாங்­கத்­துக்கு பிர­யோ­கிக்­கப்­படும் அழுத்­தங்கள் பின்­ன­ணி­யி­லேயே பேரா­சி­ரியர் பீரிஸின் இந்­திய விஜயம் அமைந்­துள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

இதே­வேளை ஜன­வரி மாதத்தில் இந்­திய இலங்கை மீன­வர்கள் சந்­தித்துப் பேச்சு நடத்­து­வ­தற்கும் ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லையில் வெளி­வி­வ­கார அமைச்­சரின் இந்­திய விஜ­யத்­தின்­போது இரண்டு நாடு­க­ளுக்கு இடை­யி­லான மீனவர் விவ­காரம் முக்­கிய இடத்தைப் பிடிக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை எதிர்­வரும் மார்ச் மாதம் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைப் பேர­வையின் 25 ஆவது கூட்டத் தொடர் நடை­பெ­ற­வுள்ள நிலையில் அந்தக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் பிரே­ரணை கொண்டு வரப்­பட்டால் இந்­தியா எவ்­வா­றான முடிவை எடுக்கும் என்­பது குறித்தும் கலந்­து­ரை­யா­டல்கள் ஆரம்­பித்­துள்­ளன.

அந்­த­வ­கையில் மார்ச் மாதம் ஜெனி­வாவில் இலங்கை தொடர்பில் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­படின் இந்­தியா எவ்­வா­றான முடிவை எடுக்கும் என்­பது தொடர்­பிலும் வெளி­வி­வ­கார அமைச்­சரின் இந்­திய விஜ­யத்­தின்­போது பேசப்­படும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

கடந்த 2012 மற்றும் 2013 ஆண்­டு­களில் ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் இலங்கை தொடர்பில் கொண்­டு­வ­ரப்­பட்ட பிரே­ர­ணை­க­ளுக்கு இந்­தியா ஆத­ர­வாக வாக்­க­ளித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 25 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது. இலங்கை தொடர்பில் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை மார்ச் 26 ஆம் திகதி தனது அறிக்­கையை சமர்ப்­பிக்­க­வுள்ளார்.(lr)

Web Design by Srilanka Muslims Web Team