மாநாடு காலை 10.15க்கு உத்தியோகப்பூர்வமாக ஆரம்பம் - Sri Lanka Muslim

மாநாடு காலை 10.15க்கு உத்தியோகப்பூர்வமாக ஆரம்பம்

Contributors

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் கலந்துகொள்ளும் 23 ஆவது உச்சி மாநாடு இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், அதன் அங்குரார்ப்பண நிகழ்வு  கொழும்பு, மஹிந்த ராகஜபக்ஷ தாமரைத் தடாக அரங்கில் காலை 10.15 முதல் 11.15 வரை இடம்பெறவுள்ளது.

51 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இம்மாநாட்டில் இன்று பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ், பொதுநலவாய அமைப்பின் தற்போதைய தலைவரும் அவுஸ்திரேலிய பிரதமருமான டொனி அயோட் ஆகியோர் உரை நிகழ்த்த உள்ளனர்.

பொதுநலவாய மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்கவுள்ள பிரிட்டிஷ் இளவரசர் சார்ள்ஸ் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.tm

Web Design by Srilanka Muslims Web Team