மாமனிதர் அஷ்ரபின் கனவுகளில் ஒன்றான அபிவிருத்தியை தேசிய காங்கிரஸ் நிறைவேற்றி வருகின்றது - அமைச்சர் அதாவுல்லா - Sri Lanka Muslim

மாமனிதர் அஷ்ரபின் கனவுகளில் ஒன்றான அபிவிருத்தியை தேசிய காங்கிரஸ் நிறைவேற்றி வருகின்றது – அமைச்சர் அதாவுல்லா

Contributors
author image

சலீம் றமீஸ்

மறைந்த மாமனிதர் கலாநிதி எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களுடைய அரசியல் பாதையினூடாக எவ்வாறு மக்களுக்கான பணிகளை செய்ய வேண்டும். அரசியல் அதிகாரத்தினை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்று  அஷ்ரப் அவர்களுடைய கனவுகளை நனவாக்குவது மட்டுமல்ல, அவர்விட்ட இடத்திலிருந்து அரசியல் தொடரை தீர்க்கதரிசனமாக மேற் கொண்டு வரும் தேசிய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்புரிமை அரசியலதிகாரம், இக்கட்சியின் எண்ணக்கருவில் உருவான கிழக்கு மாகாண சபை அரசியல் அதிகாரத்தினூடாக கிழக்கு மாகாணத்திலுள்ள மூவின மக்களுக்கும், பாரிய பணி செய்து வருகின்ற விடயம் அனைவரும் அறிந்த உண்மையாகும்.

 

வெறுமனே அறிக்கைகள் விட்டு மக்களையும், இனங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்துகின்ற அரசியல் தவிர்த்து அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்ற தேசிய காங்கிரஸ் மறைந்த தலைவர் தினத்தை நினைவு கூர்வது மாத்திரமல்ல அவருடைய கனவுகளில் ஒன்றான திட்டமிட்ட அபிவிருத்தி பணிகளை அவருடைய ஞாபகார்த்தமாக பல தடம் பதிக்கின்ற , வரலாற்று முக்கியத்துவமான அபிவிருத்திகளை செய்து வருகின்றது.

 

இந்த வகையில்தான் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களுடைய 14வது ஞாபகார்த்த நினைவு நாளை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை கிராமத்தில் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர்களின் 14 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

 

இந்த வகையில் இந்த அபிவிருத்தி திட்டத்தின் ஒரு அங்கமான பாலமுனை – ஹிறா நகரில் 03(மூன்று) கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டது. அதாவது இப்பிரதேசத்தில் வாழும் ஏழை மக்களுக்காக அமைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டம் மக்களிடம் கையளிக்கப்பட்டது, நீண்ட காலத்திற்குப் பின்னர் இப்பகுதியில் மின்சார இணைப்பு வழங்குவதற்கான ஆரம்ப நிகழ்வும் , ஏழை மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கல் போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றன.

 

தேசிய காங்கிரஸின் பாலமுனை பிரதேசத்திற்கான  அமைப்பாளர் கே.எல்.உபைத்துல்லா தலைமையில் இடம் பெற்ற பாலமுனை பிரதேசத்தின் வரலாற்று அபிவிருத்தி நிகழ்வில் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

 

அமைச்சருடன் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும், கிழக்கு மாகாண சபை அமைச்சரவையின் பேச்சாளருமான, தேசகீர்த்தி எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ.அமீர், சட்டத்தரனி ஆரீப் சம்சுதீன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், உதவிச் செயலாளர் எம்.ஐ.சலாஹூதீன்,

 

 

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, கிழக்கு மாகாண கட்டிடத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திரு.எஸ். வேல் மாணிக்கம், கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் கே.அறுந்தவராஜா, இலங்கை மின்சார சபையின் பிராந்திய பொறியியலாளர் ஹைக்கல், மத்திய நீர்ப்பாசன தினைக்களத்தின் அக்கரைப்பற்று பொறியியலாளர் எம்.ஐ.எம்.இஸட்.இப்றாஹீம், உட்பட திணைக்களங்களின் தலைவர்கள், தேசிய காங்கிரஸ் கட்சியின் அரசியல் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், பாலமுனை மற்றும் ஹிரா நகர் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

 

31

 

32

 

33

 

34

 

35

Web Design by Srilanka Muslims Web Team