மாமாவால் கல்லால் தாக்கி கொல்லப்பட்ட மருமகன் (முஸ்லிம் கொலனியில் சம்பவம்) - Sri Lanka Muslim

மாமாவால் கல்லால் தாக்கி கொல்லப்பட்ட மருமகன் (முஸ்லிம் கொலனியில் சம்பவம்)

Contributors

கண்டி – தெல்தொட்ட – கலஹா பொலிஸ் பிரிவில் முஸ்லிம் கொலனி பகுதியில் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று (29) காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

24 வயதுடைய மொஹமட் பாஹிம் என்ற இளைஞரே கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டுப் பிரச்சினை காரணமாக குறித்த இளைஞனின் மாமா இக்கொலையை புரிந்துள்ளதாக தெரியவருகிறது.

இதற்கு முன்னர் குறித்த இளைஞன் மாமாவை பொல்லால் தாக்கிக் காயப்படுத்தியுள்ளார். அந்த கோபத்தை மனதில் கொண்டு இன்றைய தினம் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பாஹிமின் தலையில் பெரிய கல் ஒன்றை போட்டு மாமா (42 வயது) கொலை செய்துள்ளார்.

தலையில் கல் விழுந்து படுகாயமடைந்த பாஹிம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்று காலை 8 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

கொலையுடன் தொடர்புடையவர் திருகோணமலை – மூதூர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் கலஹா பொலிஸார் அவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சடலம் தற்போது கலஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரண விசாரணை இன்று இடம்பெறவுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team