மாமா மருமகனை துஷ்பிரயோகம் - காத்தாங்குடியில் சம்பவம் - பொலிசார் வலை விருப்பு - Sri Lanka Muslim

மாமா மருமகனை துஷ்பிரயோகம் – காத்தாங்குடியில் சம்பவம் – பொலிசார் வலை விருப்பு

Contributors
author image

எம்.எஸ்.எம். நூர்தீன்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கர்பலா பிரதேசத்தின் மொடன் தோட்டத்திலுள்ள சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் மாமா உறவு முறையான நபரை காத்தான்குடி பொலிசார் இன்று மாலை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

 

இது பற்றி தெரியவருவதாவது,

 

மொடன் தோட்டத்தில் வசிக்கும் ஆறு வயதுடைய சிறுமியொருவரை அந்தப்பகுதியிலிருக்கும் கடற்கரை பக்கமாகவுள்ள தாழம் பற்றைக்குள் வைத்து இன்று மாலை 4மணியளவில் குறித்த நபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததை அவ்வழியால் சென்ற முச்சக்கர வண்டி சாரதியொருவர் கண்டுள்ளார்.

 

இதையடுத்து முச்சக்கர வண்டி சாரதி அந்தப்பிரதேசத்திலுள்ள பொதுமக்களை கூச்சலிட்டு அழைத்துள்ளார்.

 

இந்நிலையில், குறித்த நபரிடமிருந்து சிறுமியை மீட்ட முச்சக்கர வண்டி சாரதி சிறுமியை கர்பலா ஜும் ஆப்பள்ளிவாயலுக்கு கொண்டு வந்து சிறுமியின் வாப்பாவின் உம்மாவிடத்தில்(மூத்தம்மாவிடத்தில்) ஒப்படைத்துள்ளார்.

 

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சந்தேக நபர் தலைமறைவாகியதையடுத்து அங்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் மற்றும் பொது மக்கள் இணைந்து அந்த நபரைத் தேடி வலைவிரித்தனர்.

 

பின்னர் சந்தேக நபரை காத்தான்குடி பொலிசார் கைது செய்ததுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயின் சகோதரரே (மாமா) இந்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 

குறித்த சிறுமியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மேற் கொண்டு வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

 

குறித்த சந்தேக நபர் 25வயதுடைவர் எனவும் திருணம் செய்து மனைவியை விட்டு பிரிந்து விட்டதாகவும் தெரியவருகின்றது.

 

சிறுமியின் தாய் வெளிநாட்டில் இருப்பதாகவும் தந்தை ஊரில் இல்லையெனவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team