"மாமா.. முன்னாள் சேர்மன் ஒரு வாக்கினால் தோல்வியடைந்தார் ... " » Sri Lanka Muslim

“மாமா.. முன்னாள் சேர்மன் ஒரு வாக்கினால் தோல்வியடைந்தார் … “

2-NFGG-RAHMAN-12-01-2018

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Puvi Rahmathullah


மூதூர் ஜாயா நகர் வட்டாரத்தில் நடைபெற்ற தேசிய காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டத்திற்குச் சென்றிருந்த நான், எனதுரையின்போது “NFGGக்கு அளிக்கப்படவுள்ள வாக்குகளில் ஒரு வாக்கையேனும் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் இத்தனை தூரம் வந்து இரட்டைக்கொடிக்கு எதிராகப் பேசிக் கொண்டிருக்கின்றேன்” என்று குறிப்பிட்டிருந்தேன்.

தேர்தல் நடைபெற்று முடிந்த பின் அவ்வட்டாரத்தைச் சோ்ந்த நண்பரொருவர் என்னுடன் தொடர்பு கொண்டு, “நீங்கள் பேசும்போது தெரிவித்தவாறு ஜாயா நகர் வட்டாரத்தில் NFGG சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஒரு வாக்கினால் தோல்வியடைந்தார் மாமா” என்றார்.

எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. எப்படி என விபரம் கேட்டதற்கு அவர், “மாமா.. அந்த வட்டாரத்தில் போட்டியிட்ட முன்னாள் சேர்மன் ஹாரீஸ் என்பவருக்கு 763 வாக்குகளும், இரட்டைக்கொடியில் போட்டியிட்ட NFGG வேட்பாளருக்கு 762 வாக்குகளும் கிடைத்தன” என்றார்.

அல்ஹம்துலில்லாஹ் என்று வல்லோன் அழ்ழாஹ்வைப் புகழ்ந்து கொண்டு அந்த நண்பருக்கு நன்றி தெரிவித்தேன்.

Web Design by The Design Lanka