மாற்றுக்கட்சிகளின் கொந்தராத்துக் காரர்களுக்கு முஸ்லிம்களின் ஒன்றிணைவை பொறுக்கமுடியாமல் இருக்கின்றது. - Sri Lanka Muslim

மாற்றுக்கட்சிகளின் கொந்தராத்துக் காரர்களுக்கு முஸ்லிம்களின் ஒன்றிணைவை பொறுக்கமுடியாமல் இருக்கின்றது.

Contributors
author image

Editorial Team

கடந்தகாலத்தில் ஏற்பட்ட முஸ்லிம்களுக்கான ஒடுக்குதலால் முஸ்லிம் கட்சிகள், முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற ஊவா மாகாணத்தில் உள்ள மக்கள் பெரியோர்கள் வேண்டுகோளின் பெயரில் எமது தலைமையும், எமது கட்சியும் விட்டுக்கொடுப்புக்களை செய்து ஒன்றுசேர்த்து முஸ்லிம்கள் ஒரு அணியில் தேர்தலில் குதித்திருக்கின்றார்கள்.  ஏனென்றால் ஊவா மாகாணத்தில் எமது பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக எமது கட்சியும், மற்றைய   கூட்டுக்கட்சிகளும் இணைந்திருக்கின்றன.

 

இதைக்கண்டு  ஜ.தே.கட்சியின்  கூலிக்காரர்களாகவும் கொந்தராத்துக்காரர்களாகவும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற ஒருசில சில்லறைகளுக்கு எமது இணைவு தாங்கமுடியாமல் இருக்கின்றது.

 

 எமது முஸ்லிம்களின் கூட்டமைப்பு வெல்லப்போகின்றது என்ற செய்தி ஜ.தே.கட்சியின் கொந்தராத்துக்காரர்களுக்கு பயத்தை உண்டாக்கிருக்கின்றது. இக்காரணத்தினால் ஜ.தே.கட்சியினோடும், கட்சியின் தலைவரோடும் கைகொடுத்து புகைப்படத்தை எடுத்துக்கொண்டு நாங்கள் ஜ.தே.கட்சிக்கு ஆதரவு என்று எமது சமூகத்தை சேர்ந்த சகோதரர்களுக்கு வெட்கம் இல்லாமல் செய்தித்தாள்களில் அறிக்கைகளை விட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். இவ்வாறான அறிக்கைகள் எல்லாம் ஊவா மாகானத்தில் இருக்கின்ற முஸ்லிம்கள் கணக்கெடுக்கப் போவதில்லை.

 

கடந்தகால வரலாற்றிலே ஜ.தே.கட்சியை சேர்ந்த  பாராளுமன்ற உறுப்பினர் ரன்ஜன் ராமநாயக்க எமது ஷரியா சட்டத்தை பயங்கரமாக விமர்சித்த கட்சி என்ற கட்சிதான் ஜ.தே.க. அந்த அறிக்கைகளை இலங்கையில் உள்ள அணைத்து முஸ்லிம்களும் கண்டித்த போதும் ஜ.தே.கட்சியின் தலைவரோ, அதில் இருக்கின்ற முஸ்லிம்  பாராளுமன்ற உருப்பினர்களோ எதையும் பேசவில்லை.

 

 அவர்களுக்கு நடவடிக்கை எடுப்பதற்கு கேட்காத கட்சிகளுக்காகவா நீங்கள் வாக்கு கேட்கின்றீர்கள்?
நான் எமது அன்பான முஸ்லிம் மக்களிடம் மன்றாடி கேட்பது  ஒன்றுபடுவோம்! ஓன்றுபடுவோம்! எமது முஸ்லிம் கூட்டமைப்பான இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து எமது சமூகத்தினுடைய பலத்தை நிருபிப்போம்.

 

மாற்று சமூகத்தினருக்கு நாம் ஒற்றுமையாக உள்ளோம் என்பதை எடுத்துக்காட்டுவோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்  உயர்பீட உறுப்பினரும்,  தேசிய பணிப்பாளரும்,  அம்பாறை மாவட்ட பொருளாளருமான A.C.எஹியாகான்  விடுத்த அறிக்கையில் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team