மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி கொடுப்பனவுகள். அட்டாளைச்சேனை பிரதேச செயலகப்பிரிவில் ஆரம்பம். - Sri Lanka Muslim

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி கொடுப்பனவுகள். அட்டாளைச்சேனை பிரதேச செயலகப்பிரிவில் ஆரம்பம்.

Contributors

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் 480 மாற்றுத் திறனாளிகள் இனங் காணப்பட்டுள்ளனர் .
அவர்களுள் 50 பேருக்கு சமூக சேவைகள் அமைச்சு பிரதேச செய லகத்தினூடாக மாதாந்தம் மூவாயிரம் ரூபா உதவிக்கொடுப்பனவு வழங்கி வருவதாக சமூக சேவைகள் உத்தியோகத்தர் எம்.ஐ. எம் . அன்வர் தெரிவித்தார் .
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவி த்ததாவது , மாற்றுத் திறனாளிகளை சமூ கத்தோடு இணைத்து புனர்வாழ்வளிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அரசாங்கம் பல்வேறு சமூக நலத்திட்டங்களை முன் னெடுத்து வருகின்றது . இதற்கிணங்க , மாற்றுத்திறனாளிகளுக்கான 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீடமைப்பு மானியம் , மூளை வளர்ச்சி குன்றிய சிறுவர்களுக்கான ஆயிரம் ரூபா மாதாந்த உதவிக்கொடுப்பனவு , புற்று நோய் , தலசீமியா , தொழு நோய் , சிறுநீரக நோய் போன்ற நோய் நிவார ணக்கொடுப்பனவுகள் 20 ஆயிரம் ரூபா சுயதொழில் உதவிக்கொடுப்பனவு மற் றும் சக்கர நாற்காலி , முச்சக்கர வண்டி , காது கேள் கருவி , மூக்குக்கண்ணாடி , வெள் ளைப்பிரம்பு , கண்வில்லை உள்ளிட்ட விஷேட தேவையுடையோருக்கான துணை உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன .
அத்துடன் சமுதாய அடிப்படையிலான புனர்வாழ்வுத் திட்டத்தின் கீழ் சுயதொழில் பயிற்சிகள் , ஆலோசனைகள் , சிகிச்சை வழிகாட்டல்கள் என்பனவும் மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக சமூக சேவை உத்தியோகத்தர் மேலும் தெரிவித்தார் .(tn)

Web Design by Srilanka Muslims Web Team