மாலைத்தீவின் புதிய ஜனாதிபதிக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து! - Sri Lanka Muslim

மாலைத்தீவின் புதிய ஜனாதிபதிக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து!

Contributors

மாலைத்தீவில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற அப்துல்லா யாமின் அப்துல் கையூமிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில்,

மாலைத்தீவு மக்கள் உங்கள் கொள்கைகள் மீதும் உங்கள் தலைமைத்துவத்தின் மீதும் வைத்திருந்த நம்பிக்கையை இந்த வெற்றி எடுத்துக்காட்டுகிறது.

1960ஆம் ஆண்டு காலப் பகுதியில் இருந்து இலங்கைக்கும் மாலைத்தீவிற்கும் இடையில் இராஜதந்திர தொடர்புகள் காணப்படுகிறன்றன. அன்று முதல் இருநாடுகளும் நெருங்கிய தொடர்புகளை பேணி வருகின்றன.

இலங்கைக்கும் மாலைத்தீவுக்கும் இடையிலான உறவுகள் நட்புறவின் பாரம்பரியத்தையும் நெருங்கிய கூட்டுறவையும் பரஸ்பர கௌரவத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. மாலைத்தீவு சர்வதேச அரங்கில் இலங்கைக்கு தனது ஒத்துழைப்பையும் கூட்டொருமைப்பாடடையும் தெரிவித்துள்ளது.

இது இரு நாடுகளுக்குமிடையிலான நல்லுறவை மேலும் பலப்படுத்தியுள்ளது.

இலங்கையும் மாலைத்தீவும் வலுவான வர்த்தக உறவுகளை பகிர்ந்து கொண்டுள்ளன. இலங்கையுடனான குறிப்பிடத்தக்க ஏற்றுமதி இறக்குமதிகளில் குறிப்பாக மாசி ஏற்றுமதி செய்யப்படுவதும் அரிசி இறக்குமதி செய்யப்படுவதும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இம்மாதம் நடைபெற்ற மாலைத்தீவு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற யாமின், முன்னாள் ஜனாதிபதி மௌமூன் அப்துல் கையூமின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.

-அத தெரண

Web Design by Srilanka Muslims Web Team