மாலைத்தீவு குண்டுத் தாக்குதலில் நஷீத் காயம்..! - Sri Lanka Muslim

மாலைத்தீவு குண்டுத் தாக்குதலில் நஷீத் காயம்..!

Contributors

மாலை தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான முஹம்மத் நஷீத், அவரது வீட்டருகே இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலைதீவு அசியல் தளம்பல் நிலையில் காணப்படுகின்ற அதேவேளை, இவ்வாறான தாக்குதல்கள் கோழைத்தனமானது என வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லாஹ் கருத்து வெளியிட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றில் பொருத்தப்பட்ட குண்டு வெடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team