மாலை தீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார் - Sri Lanka Muslim

மாலை தீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்

Contributors

மாலைதீவு ஜனாதிபதி யாசீர் ஆமீன் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்த மாத இறுதியில் மாலை தீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்வார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

 

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஆமீனுக்கு எழுத்து மூலம் அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலைதீவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் டிக்சன் சரத் சந்திரவினால் இந்த கடிதம், மாலைதீவு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி மஹிந்தவின் அழைப்பை, மாலைதீவு ஜனாதிபதி ஆமீன் ஏற்றுக்கொண்டுள்ளார்.இலங்கைக்க விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

தமது இலங்கை விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு, சுகாதாரம், மற்றும் கல்வி போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக மாலைதீவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

 

மாலைதீவில் அமைதியான முறையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றமை பாராட்டுக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.(gtn)

Web Design by Srilanka Muslims Web Team