மாலை வேளையில் பங்களாவில் கூடும் மாகாணசபை TNA பிரமுகர்கள்? - Sri Lanka Muslim

மாலை வேளையில் பங்களாவில் கூடும் மாகாணசபை TNA பிரமுகர்கள்?

Contributors

கூட்டமைப்பின் வடமாகாண சபை அமைச்சர்கள் மற்றும் அங்கத்தவர்களிற்கும் ஆளுநர் சந்திரசிறிக்குமிடையே காணப் பட்ட தேவையற்ற சில முரண்பாடுகள் முடிவுக்கு வந்துள்ளன.

 

பெரும்பாலான வடமாகாண சபை அமைச்சர்களும் மாகா ணசபையின் கூட்டமைப்பு அங்கத்த வர்களும் மாலை வேளைகளில் ஆளுநர் பங்களாவிற்கு படையெடுத்து வருவதாக கூறப்படுகின்றது. வடமாகாண சபையானது கடந்த மூன்று மாதங்களாக சிறப்பாகச் செயலாற்றி வருவதாக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியும் தெரிவித்துள்ளார்.

 

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் வடமாகாண அமைச்சர்களுக்கும் ஆளுநர் ஒத்துழைப்பு இருக்க வேண்டும். அத்துடன் வடமாகாண பிரதம செயலாளர், வடமாகாண நிறைவேற்று அதிகாரிகளும் வடமாகாண சபைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

 

இவ்வாறான ஒத்துழைப்புகள் மாகாண சபையுடனும் மத்திய அரசாங்கத்துடனும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார். அத்துடன் ஒரு சிலர் தவிர்ந்த அனைவரும் தற்போது தன்னுடன் ஒத்துழைத்து மாகாணசபையின் வளர்ச்சிக்கு பாடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

எது எப்படியோ ஆளுநரும், வடமாகாண சபை முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் மற்றும் அங்கத்தவர்கள் இணைந்து செயற்பட்டால்தான் மக்களுக்கு நன்மை. இவ்விடயத்தில் ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.(tk)

Web Design by Srilanka Muslims Web Team