மாளிகாவத்தை YMMA ஸ்தாபகத் தலைவா் தாசிம் கனடா டொரன்டாவில் காலமானார் - Sri Lanka Muslim

மாளிகாவத்தை YMMA ஸ்தாபகத் தலைவா் தாசிம் கனடா டொரன்டாவில் காலமானார்

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

இவா் மாளிகாவத்தையை சோ்ந்தவா் இவா். மாளிகாவத்தையில் உள்ள வை.எம்.எம்.ஏ என்ற அமைப்பினை ஸ்தாபித்து அதன் ஊடாக பல்வேறு சமூக நல சேவைகளைச் செய்து வந்தாா். அவரின் பெயரில் மாளிகாவத்தையில் ஒரு வரவேற்பு மண்டபமொன்றினையும் நிரமாணித்தாா். மற்றும் தொழிற்பயிற்சி, ஏழைக் பெண்களுக்கு மாதா மாதம் திருமணங்களை முடிப்பதற்கான சகல செலவுகளையும் ஏற்று அத்திட்டத்தினை அமுல்படுத்தி வந்தாாா்.

தொழிற்பயிற்சி திட்டங்களையும் அறிமுகப்படுத்தி இப்பிரதேச இளைஞா் யுவதிகளுக்கு சுயதொழில் முயற்சிகளுக்கும் வித்திட்டாா். சிறுவா் பராமரிப்பு பாலா் பாடசாலை போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தினாா். கடந்த 40 வருடங்களுக்கு மேலாக மாளிகாவத்தை வை.எம்.எம். ஏ யினால் ஆரம்பிக்கப்பட்ட வாழ்வாதாரத் திட்டங்கள் இன்றும் கொழும்பு வாழ் பிரதேச மக்களுக்கு பெரிதும் பிரயோசனமடைந்து வருகின்றனா்.

மறைந்த ஜனாதிபதி ஆர். பிரேமதாசா அவா்கள் மலாயா் சமுகத்தின் முதன் முதலாக தேசமான்ய பட்டம் வழங்கி இவரது சேவையை கௌரவித்தா்ா். அத்துடன் லயண்ஸ்கழகம், மறைந்த அமைச்சா் எம்.எச். எம். முஹம்மத் உடன் இணைந்து இஸ்லாமிய நிலையத்திலும் இணைந்து சேவையாற்றினாா். அத்துடன் றியாத்தில் உள்ள அமேரிக்கன் சிற்டி வங்கியின் உப தலைவராக அங்கு சிறிது காலம் கடமையாற்றி அதன் ஊடாகவும் மாளிகாவத்தை பிரதேச மக்களுக்கு உதவி செய்தாா்.

மறைந்த அரசியல் வாதிகளான முன்னாள் அமைச்சா் ஏ.எச்.எம். அஸ்வா், செனட்டா் மசூர் மௌலானா, சிரேஸ்ட ஊடகவியலாளா் எஸ்.பி. ஹலால்டீன் ஆகியோருடன் இனைந்து பல்வேறு பட்ட சமுக சேவைகளில் தன்னையே அர்ப்பணித்தவா் எஸ்.பி.சி தாசீம்.

இவரது மனைவி ஜெஸ்மின் ஆவார். இவர் தஸ்லிம், தஸமிா், மும்தாஜ் பரீன் ஆகியோரின் தந்தையும் ஆவாா்.

thasim ymma

Web Design by Srilanka Muslims Web Team