மாவடிப்பள்ளி பல்கோன் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது » Sri Lanka Muslim

மாவடிப்பள்ளி பல்கோன் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது

n99

Contributors
author image

யூ.கே. காலித்தீன்

கல்முனை பல்கோன் விளையாட்டுக்கழகம் ஒழுங்கு செய்திருந்த அணிக்கு 7 பேர் கொண்ட 6 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியில் 5 விக்கட்டினால் மாவடிப்பள்ளி விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று பல்கோன் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

கல்முனை வீச் (அல்பலாஹ்) விளையாட்டு மைதானத்தில் நேற்று (5) வெள்ளிக்கிழமை கழகத்தின் தலைவர் ஏ.எல்.முஹம்மட் தலைமையில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதிப் போட்டியில் சாய்ந்தமருது நியுஸ்டார் விளையாட்டுக்கழகத்தை எதிர்கொண்ட மாவடிப்பள்ளி விளையாட்டுக்கழகம் 5 விக்கட்டினால் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது நியு ஸ்டார் விளையாட்டுக்கழகம் 6 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுக்களை இழந்து 31 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மாவடிப்பள்ளி விளையாட்டுக்கழகம் 3.4 பந்துவீச்சுக்கு 1 விக்கட்டினை மாத்திரம் இழந்து 32 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

இப்பிராந்தியத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சேரந்த 16 விளையாட்டுக்கழகங்கள் பங்கேற்ற மேற்படி சுற்றுப் போட்டி தொடரில் மாவடிப்பளி விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த ஏ.பஸ்மீர் சிறந்த பந்து வீச்சாளராகவும் அதே விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த எம். பாஹிம், தொடராட்டக்காரராகவும் ஆட்டநாயகனான மாவடிப்பள்ளி விளையாட்டு கழகத்தின் முஹமட் ஸரோஸும் தெரிவு செய்யப்பட்டனர்.

இறுதிநாள் நிகழ்விற்கு அம்பாரை மாவட்ட தொலைபேசி வர்த்தக சங்கத்தின் தலைவரும் இக்ரா மொபைல் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான யூ.எல்.அப்துல் சத்தார் பிரதம அதிதியாகவும், ஈ.வெஸ்ட் கெம்பஸ் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ. ஜௌபர் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு நினைவுச் சின்னங்களையும் மற்றும் பதக்கங்களையும் வழங்கிவைத்தனர்.

n n.jpg2

Web Design by The Design Lanka