மாவடி பேர்ல்ஸ் விளையாட்டு கழகத்தின் 3ம் வருட நிறைவை முன்னிட்டு புதிய சீருடை அறிமுகமும் கடினபந்துக்கான அங்குரார்ப்பன நிகழ்வும்..! - Sri Lanka Muslim

மாவடி பேர்ல்ஸ் விளையாட்டு கழகத்தின் 3ம் வருட நிறைவை முன்னிட்டு புதிய சீருடை அறிமுகமும் கடினபந்துக்கான அங்குரார்ப்பன நிகழ்வும்..!

Contributors

மாவடி பேர்ல்ஸ் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் கழகத்தின் விளையாட்டு சீருடை மற்றும் உத்தியோகபூர்வ கழக டீ-சேட் அறிமுகப்படுத்தும நிகழ்வு 2021.7.18ம் திகதி கழகத்தின் தலைவர் ஏ.ஜே.எம் அஸ்ரப் பலாஹி தலைமையில் அல்-அஸ்ரப் மஹா வித்தியாலய ஹுசைன் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பேர்ல்ஸ் விளையாட்டு கழகத்தின் ஊடாக கடினபந்து விளையாட்டை உருவாக்கும் அடிப்படையில் கடின பந்து அணி அங்குரார்பனம் செய்யப்பட்டது.

மேலும் அன்மையில் மரணித்த விளையாட்டு துறையில் சிறப்பாக செயற்பட்ட M.நழிம் மற்றும் M.M.சஜி ஆகியோருக்கான துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது..

அதனைத் தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள கழகத்தின் உப செயலாளர் ஆர்.எம். அரூஸ் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வின் அதிதிகளாக காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான கெளரவ எம்.என்.எம்.றணீஸ், எம்.எம்.ஜலீல் மற்றும் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் என்.எம்.மஃறூப், பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எல்.ரஜாப்டீன், ஆசிரியர் யாகூப் ஹசன் மற்றும் முன்னாள் அதிபர் எம். ஐ.எம்.சைபுதீன் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர் எம்.வை.மனாப் மற்றும் எமது கழகத்தின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team