மாவட்ட சம்பியனாக பாலமுனை ட்ரை ஸடார்! » Sri Lanka Muslim

மாவட்ட சம்பியனாக பாலமுனை ட்ரை ஸடார்!

pa

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(அய்ஷத்)


2017 ஆம் ஆண்டுக்கான அம்பாரை மாவட்ட விளையாட்டு விழாவின் குழுநிலை போட்டிகள் தற்போது இடம் பெற்று வருகின்றன.

இதில் ஓர் அங்கமான எல்லே விளையாட்டுப் போட்டி இன்று (2017.04.30) பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

பிரதேச செயலக மட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட கழகங்கள் பங்குபற்றிய இப்போட்டியின் இறுதிப் போட்டிக்கு அக்கரைப்பற்று பிரதேச செயலக மட்ட சம்பியனுக்கும் அட்டாளைச்சேனை பிரதேச சம்பியன் பாலமுனை ட்ரை ஸ்டார் விளையாட்டுக் கழகத்துக்கும் இடையே இடம் பெற்றது. இதில் பாலமுனை ட்ரை ஸ்டார் விளையாட்டுக் கழகம் 7:1 என இலகுவாக வெற்றி பெற்று மாவட்ட மட்ட சம்பியனாக முடிசூடிக் கொண்டது.

பல தடவைகள் மாவட்ட மட்ட சம்பியனாகவும் மாகாணமட்ட சம்பியனாகவும் தெரிவு செய்யப்பட்ட இவ் அணியினர் 05 தடவைகள் தேசிய மட்டத்தில் பங்குபற்றியுள்ளதோடு 2008 ஆம் ஆண்டில் அகில இலங்கை மட்டத்தில்(தேசிய) 03வது அணியாக தெரிவு செய்யப்பட்டு முழு கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்த அணியாக திகழ்கிறது.

Web Design by The Design Lanka