மிக அவசர நிலைமைகளில் மாத்திரம் 119 இலக்கத்திற்கு அழைக்கவும். போலீசார் வேண்டுகோள். - Sri Lanka Muslim

மிக அவசர நிலைமைகளில் மாத்திரம் 119 இலக்கத்திற்கு அழைக்கவும். போலீசார் வேண்டுகோள்.

Contributors

அவசர நிலைமைகளில் மாத்திரம் 119 என்ற இலக்கத்திற்கு அழைப்பை
ஏற்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.

நாளொன்றில் 119 இலக்கத்திற்கு உள்வரும் அழைப்புகளில் 93 சதவீதமானவை அவசர நிலைமைகள் அல்லாதவை எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதன் காணமாக அவசரமாக அழைப்பை மேற்கொள்வோருக்கு தொடர்பு கொள்ள முடியாத நிலை உருவாகுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் புள்ளிவிபரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்தாண்டு 119 என்ற அவசர பிரிவின் தொலைபேசிக்கு 1,2 32,272 அழைப்புகள் வந்துள்ளதோடு, நாளொன்றுக்கு சுமார் 3,300 அழைப்புகள் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதனால், நாளொன்றில் சுமார் 8,000 பேர் மேற்கொண்ட அழைப்புகள் 119 இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், 119 இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்குவோருக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் எதிர்ப்பார்ப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team