மின்சார சபைத் தலைவருக்கு வேண்டுகோள் » Sri Lanka Muslim

மின்சார சபைத் தலைவருக்கு வேண்டுகோள்

haleem1

Contributors
author image

இக்பால் அலி

இலங்கை மின்சார சபையினர் நாடு பூராகவும் மின்வெட்டை அமுல்படுத்தி மேற்கொள்ளவுள்ள புதிய மின்சாரத் திருத்தப் பணிகளை எதிர்வரும் நோன்பு பெருநாள் தினங்களில் வைக்காமல் வேறு நாட்களில் வைக்குமாறு மின்சார சபைத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.

அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்
இலங்கை மின்சார சபை புதிய திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்காக நாடாளவிய ரீதியில் மின் விநியோகத் தடைகளை எதிர்வரும் 15, 16,17 ஆகிய தினங்களில் ஏற்படுத்தவுள்ளதாக அறிவித்தல் விடுத்துள்ளனர்.

முஸ்லிம்களுடைய நோன்புப் பெருநாள் 16, 17 ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளதால் இதற்கு முன்னரே அல்லது பெருநாள் தினம் அன்றோ மின் விநியோகம் தடைப்படுமானால் பாரிய பிரச்சினையை முஸ்லிம் மக்கள் எதிர்நோக்க வேண்டி வரும்.

எனவே இம்மாதம் குறித்த 15, 16, 17 ஆகிய தினங்களில் புதிய திருத்தப் பணிகளை மேற்கொள்ளவுள்ள வேலைத் திட்டத்தை பிரிதொரு தினத்தில் மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அமைச்சர் ஹலீம் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka