மின்சார சபையின் பிராந்திய காரியாலயத்தை சாய்ந்தமருதில் அமைக்குமாறு சபையில் தீர்மானம் நிறைவேற்றம் - Sri Lanka Muslim

மின்சார சபையின் பிராந்திய காரியாலயத்தை சாய்ந்தமருதில் அமைக்குமாறு சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

Contributors
author image

S.Ashraff Khan

இலங்கை மின் சார சபையின் கல் முனைப் பிராந்திய பொறியியலாளர் அலுவலகத்தின் உப காரியாலயம் ஒன்றை சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைக்குமாறு கோரும் தீர்மானம் கல்முனை மாநகரசபையில் நிறை வேற்றப்பட்டுள்ளது.

 

கல் முனை மாந கர சபையின் மாதாந்த சபை அமர்வு மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலை மையில் நடை பெற்ற போதே இத்தீர்மானம் நிறை வேற் றப் பட் டது.

 

மாந கர சபை பிரதி முதல்வர் எம்.ஐ. எம்.பிர்தௌஸ் இதற்கான பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.

 

அவர் இப்பிரேரணையை சமர்ப்பித்து உரை யாற் று கையில் குறிப்பிட்டதாவது;

 

எமது கல் மு னையில் இயங்கி வருகின்ற இலங்கை மின் சார சபையின் பிராந் திய பொறியியலாளர் அலுவலகத்தின் உப காரியாலயம் ஒன்று சாய்ந் த ம ருதில் அமைக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

 

ஏனெனில் சாய்ந்தமருது பிரதேசம் மற்றும் அண்மித்த கிரா மங் க ளான மாளி கைக் காடு, காரை தீவு, மாவடிப்பள்ளி உள்ளிட்ட பிரதேசங்களில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான மின் பாவனையாளர்கள் உள்ளனர்.

 

இவர்கள் மாதாந்த மின் கட் டணம் செலுத் துதல், மின் துண்டிப்பு மீள்இணைப்புக் கட் டணம் செலுத் துதல் மற்றும் தேவை க ளுக் காகப் பல் வேறு சிர மங் க ளுக்கு மத் தியில் கல் முனை பிராந் திய மின் பொறியியலாளர் அலு வ ல கத் திற்கே செல்ல வேண் டியுள்ளது.

 

ஆகையினால் குறித்த பிரதேசங்களை சேர்ந்த பொது மக்களின் நலன் கருதி கல்முனை மின் பொறியியாளர் அலுவலகத்தின் உப காரியாலயம் ஒன்றை சாய்ந்தமருதில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்முனை மாநகர சபை கோரிக்கை விடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

 

இதனைத் தொடர்ந்து மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவுடன் இப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது

 

10

 

11

Web Design by Srilanka Muslims Web Team