மின்நிலைய விவகாரம் - அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள பங்காளிக்கட்சிகள் பிரதமர் சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்து..! - Sri Lanka Muslim

மின்நிலைய விவகாரம் – அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள பங்காளிக்கட்சிகள் பிரதமர் சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்து..!

Contributors

ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பதினொரு சிறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு இடையில் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் குறித்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இறுதி நேரத்தில் தன்னால் இந்த சந்திப்பில் கலந்து கொள்ள முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நாளைய தினம் 11 கட்சி தலைவர்களையும் அலரி மாளிகைக்கு வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் 40 சதவீதமான பங்குகள் அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டமைக்கு ஆளும் அரசாங்கத்தில் உள்ள 11 சிறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மின்வளத்துறை அமைச்சர் காமினி லொக்குகேவிற்கு தெரியாமல் இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க வெளியிடும் கருத்துப்படி குறித்த திட்டத்திற்கான உடன்படிக்கை கடந்த 17ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு கைச்சாத்திடப்பட்டதாக தெரிய வருகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கா செல்வதற்கு முன்னர் அவசர அவசரமாக இந்த உடல் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதற்கு ஆளும் கட்சியில் உள்ள பங்காளி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team