மின்னல் தாக்கி சிறுவன் சபீர் றுஸைத் மரணம் » Sri Lanka Muslim

மின்னல் தாக்கி சிறுவன் சபீர் றுஸைத் மரணம்

minnal

Contributors
author image

ABDUL SALAM YASEEM - TRINCO

கெப்பித்திகொள்ளாவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட முஸ்லிம் அற்றாவ பகுதியில் நேற்று (08) மாலை 4.00மணியளவில் மின்னல் தாக்கி சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் கெப்பித்திகொள்ளாவ- அற்றாவ புதிய வளவைச்சேர்ந்த சபீர் றுஸைத் (14வயது) எனவும் தெரியவருகின்றது.

வீட்டில் மழை பெய்து கொண்டிருந்த போது மலசல கூடத்திற்கு சென்றவரை காணவில்லையென தேடிய போது மலசலகூடம் மூடப்பட்டிருந்ததாகவும் அதனையடுத்து மூடப்பட்டிருந்த கதவை திறந்து பார்த்த போது வீழ்ந்து கிடப்பதை அவதானித்த தாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

ஆனாலும் மலசல கூடத்திற்கு சென்ற பின்னர் மின்னல் அடித்ததாகவும் அதனையடுத்தே மலசலகூடத்திற்கு சென்றவரை தேடியதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் கெப்பித்திகொள்ளாவ பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கெப்பித்திகொள்ளாவ பொலிஸார் தெரிவித்தனர்.

Web Design by The Design Lanka