மியன்மாரிலுள்ள இலங்கையர்கள் தம்மை நாட்டுக்கு அழைக்குமாறு கோரிக்கை..! - Sri Lanka Muslim

மியன்மாரிலுள்ள இலங்கையர்கள் தம்மை நாட்டுக்கு அழைக்குமாறு கோரிக்கை..!

Contributors
author image

Editorial Team

மியன்மரில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக அங்கு வசிக்கும் 33 இலங்கையர்கள் தம்மை மீளவும் இலங்கைக்கு அழைக்குமாறு அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

சுமார் 206 இலங்கையர்கள் தற்போது மியாமனரில் வசித்து வருவதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன, அவர்களில் 33 பேர் மீளவும் தம்மை இலங்கைக்கு அழைக்குமாறு கோரியுள்ளனர்.

இது குறித்து கொழும்பு ஆங்கில் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மியான்மர் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதுடன், அரச தலைவர் ஆங் சான் சூகியையும் கைது செய்துள்ளனர். இதனால் பெப்ரவரி தொடக்கத்தில் இருந்து மியான்மரில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளதுடன், ஆங் சான் சூகி விடுதலை செய்யப்பட வேண்டும் மற்றும் பொதுமக்கள் ஆட்சியை மீட்டெடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

இராணுவ ஆட்சிக்கு பின்னர் மார்ச் 27ம் திகதி மிகவும் மோசமான நாளாக மாறியது. அன்றைய தினம் மட்டும் 114 பேர் இராணுவத்தால் கொல்லப்பட்டனர். இதில் ஏழு குழந்தைகள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team