மியன்மார் அரச ஆபரண நிறுவனம் மீது தடை விதித்தது அமெரிக்கா - Sri Lanka Muslim

மியன்மார் அரச ஆபரண நிறுவனம் மீது தடை விதித்தது அமெரிக்கா

Contributors

மியன்மார் அரசாங்கத்தின் மியன்மார் ஜெம் என்டர்பிரைஸ் நிறுவனத்துக்கு அமெரிக்க நிதித்துறை தடை விதித்துள்ளது.

ஆபரணக்கற்கள் விற்பனை செய்யும் அந்நிறுவனத்தின் அனைத்துச் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. நிறுவனத்துடனான எல்லாப் பரிவர்த்தனைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த நடவடிக்கை, மியன்மார் இராணுவத்தின் வருவாயைப் பாதித்து, அதன் மீதான நெருக்கடியை அதிகரிக்கும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அன்ட்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.

மியன்மார் மக்கள் மீது வன்முறை தொடர்ந்தால் இன்னும் கூடுதலான தடைகள் விதிக்கப்படும் என அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

மியன்மார் ஜெம் என்டர்பிரைஸ் நிறுவனம், நாட்டின் சுரங்கங்களை நிர்வகித்து, அவற்றிலிருந்து கிடைக்கும் ஆபரணக் கற்களைச் சந்தைப்படுத்தி வருகிறது.

மியன்மாரில் பெப்ரவரி முதலாம் திகதி நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர், அந்நாட்டு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் கூறப்படும் வேறு 3 ஆபரணக்கற்கள் நிறுவனங்களுக்கு அமெரிக்கா ஏற்கனவே தடை விதித்தது.

மியன்மாரில் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னர் அங்கு தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 600 க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team