மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்குப் பதிலடியே புத்தகயா தாக்குதல்! - Sri Lanka Muslim

மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்குப் பதிலடியே புத்தகயா தாக்குதல்!

Contributors

(dc)

இந்திய புத்தகயா மீது கடந்த ஜூலையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல், பர்மாவில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாகவே நடாத்தப்பட்டது என இந்தியாவின் முகாஜதீன் அமைப்பின் உறுப்பினர் மொஹம்மட் உமர் ஸித்தீக் இந்தியாவின் பாதுகாப்புப் பிரிவுக்குத் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.

 

புத்தகயா தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முகாஜதீன் அமைப்பின் உறுப்பினரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

புத்தகயா புத்தர்களின் சர்வதேச மத்தியஸ்தலம் என்பதனாலும், இதற்கு வெளிநாடுகளிலிந்து பெரும் தொகையான மக்கள் வருகை தருவதனாலும் இந்த நிலையத்தின் மீது தாக்குதல் நடாத்த தீர்மானித்ததாக அவர் கூறியுள்ளார் எனவும் சிங்கள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team