மியான்மரில் உடைத்து நொறுக்கப்பட்ட ஆயிரம் வீடுகள்: நிர்க்கதியில் மக்கள் - Sri Lanka Muslim

மியான்மரில் உடைத்து நொறுக்கப்பட்ட ஆயிரம் வீடுகள்: நிர்க்கதியில் மக்கள்

Contributors

 

qout285

இராணுவ ஆட்சி நடைபெற்ற மியான்மரில் தற்போது மெல்ல மெல்ல ஜனநாயகம் மலர்ந்து கொண்டிருக்கிறது.

 

 

இந்நிலையில் யாங்கூன் புறநகர் பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான இடங்களில் மக்கள் சட்டவிரோதமாக குடியிருந்து வந்தனர். சுமார் ஆயிரம் குடும்பங்கள் அங்கு வாழ்ந்து வந்தனர்.

 

 

இராணுவத்திற்கு சொந்தமான இப்பகுதியை காலி செய்ய வேண்டும் அரசு அறிவிப்பு விட்டது. ஆனால், மக்கள் யாரும் அப்பகுதியை காலி செய்து செல்லவில்லை.

 

 

இதையடுத்து கோபம் கொண்ட மியான்மர் அரசு, புல்டோசர்களை வைத்து அந்த வீடுகளை எல்லாம் இடித்து தள்ளியது.

 

 

என்ன செய்வது, எங்கு செல்வது என்று புரியாத மக்கள் அப்போது அழுது புலம்பிய காட்சிகள் பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது என்று கூறப்படுகிறது.

http://www.aljazeera.com/video/asia-pacific/2014/02/myanmar-destroys-1000-homes-at-squatter-camp-20142514363

Web Design by Srilanka Muslims Web Team