மியான்மருக்கு ஒ.ஐ.சி தலைவர்கள் வருகை : புத்த பயங்கரவாதிகள் போராட்டம் - Sri Lanka Muslim

மியான்மருக்கு ஒ.ஐ.சி தலைவர்கள் வருகை : புத்த பயங்கரவாதிகள் போராட்டம்

Contributors

உலகிலுள்ள நாடுகளில் 57 நாடுகள் முஸ்லிம் நாடுகளாகும். அந்த 57 முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு தான் ஒ.ஐ.சி.

கடந்த ஒரு வருடத்திற்கும் முன்பு மியான்மர் என்று அழைக்கப்படும் பர்மாவில் புத்த பயங்கரவாதிகளால் 240 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளில் அகதிகளாக உள்ளனர்.

முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்தை முடிக்கு கொண்டு வர அப்பொழுதே ஒ.ஐ.சி சார்பில் சவூதி அரேபியா ஜித்தா நகரில் மாநாடு நடத்தப்பட்டது.

அந்த மாநாட்டில் சவூதி அரேபியா மன்னர் அப்துல்லாஹ் தலைமையில் நடைபெற்ற அந்த மாநாட்டில் அன்றைய ஈரான் அதிபர் அஹமதி நிஜாத் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அந்த மாநாட்டில் சவூதி மன்னர் அப்துல்லாஹ்வின் இருக்கைக்கும் அருகாமையில் ஈரான் அதிபர் அஹமதி நிஜாத்துக்கு இருக்கைகள் போடப்பட்டது.

அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தான்…

உடனடியாக பர்மா கலவரம் நிறுத்தப்பட வேண்டும் இல்லையென்றால் நடப்பதே வேறு, சர்வதேச சமுதாயம் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கும் என்று அந்த மாநாட்டில் பர்மாவுக்கு எதிராக எச்சரிக்கை விடப்பட்டது.

ஒ.ஐ.சி யின் மாநாடு, தீர்மானம் உள்ளிட்ட முழு விவரங்களையும் அப்பொழுதே நாம் பதிவாக வெளியிட்டுள்ளோம். உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்…

இப்பொழுது…

கலவரம் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு ஒ.ஐ.சி. என அழைக்கப்படும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC – Organization of Islamic Cooperation) பிரதிநிதிகள் இன்று வருகை தருகின்றனர்.

அரசுப் பிரதிநிதிகள், தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஒ.ஐ.சி. பிரதிநிதி குழுவினர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ராக்கேன் மாநிலத்திற்கும் செல்கின்றனர்.

ஒ.ஐ.சி.யின் பொதுச் செயலாளர் இக்மலுத்தீன் இஹ்ஸான் ஓக்லு தலைமையிலான இக்குழுவில் பல்வேறு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.

வெள்ளிக்கிழமை ஒ.ஐ.சி. குழுவினர் ராக்கேன் மாநிலம் செல்கிறார்கள்.

ஒ.ஐ.சி. பிரதிநிதிகள் வருகைக்கு அனுமதி அளிக்கப்பட்டதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட புத்த சாமியார்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team