மியான்மாரை விட்டு வெளியேறும் ரொஹிஞ்சா முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : ஐ.நா கவலை » Sri Lanka Muslim

மியான்மாரை விட்டு வெளியேறும் ரொஹிஞ்சா முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : ஐ.நா கவலை

miy

Contributors
author image

BBC

மியான்மாரிலிருந்து வெளியேறி வங்கதேசத்திற்குள் நுழையும் ரொஹிஞ்சா முஸ்லிம்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

கடந்த வாரம் மட்டும் சுமார் 22 ஆயிரம் பேர் கிழக்கு வங்கதேசத்திற்குள் நுழைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன்பு நெருக்கடி நிலை தொடங்கியதிலிருந்து இதுவரை சுமார் 65 ஆயிரம் பேர் எல்லை தாண்டியுள்ளனர்.

வட ரக்கீன் மாவட்டம் இன்னும் மூடப்பட்ட ராணுவ பகுதியாக உள்ளது.

ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளை குறிவைப்பதாக மியான்மார் ராணுவம் கூறுகிறது.

ஆனால், ரொஹிஞ்சா இன பொதுமக்களை கொலை செய்வதாகவும், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குவதாகவும் ராணுவம் மீது பரவலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காக 12 நாள் சுற்றுப்பயணமாக ஐ.நாவின் சிறப்பு தூதர் யங்கி லீ மியான்மார் வந்துள்ளார்.

Web Design by The Design Lanka