மீண்டுமொரு ஜனாதிபதி படுகொலை சூழ்ச்சியா? நாமல் வெளியிட்ட அதிரடி தகவல் - Sri Lanka Muslim

மீண்டுமொரு ஜனாதிபதி படுகொலை சூழ்ச்சியா? நாமல் வெளியிட்ட அதிரடி தகவல்

Contributors

இலங்கையில் தற்போது ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கான எந்த திட்டமும் இருப்பதாக புலனாய்வில் கிடைக்கவில்லை என்று பொலிஸ் உளவாளியான நாமல் குமார தெரிவிக்கின்றார்.

விசேடமாக கடந்த 2017ஆம் ஆண்டில் இடம்பெற்ற தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அப்போதைய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன ஆகியோரை படுகோலை செய்வதற்கான சூழ்ச்சிகள் குறித்து விசாரணைகள் முறையாக இடம்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சமூக வலைத்தளமொன்றில் இன்று புதன்கிழமை நடந்த நேர்காணலின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, ஜனாதிபதிகள் படுகொலை குறித்த சூழ்ச்சி தொடர்பிலான ஆவணங்கள் பல தன்னிடம் இருப்பதாகவும், அவற்றை தொகுத்து அளிப்பதற்கு குறைந்தது 10 இலட்சம் ரூபா வரை செலவாகும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதேவேளை, ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் சௌபர் மௌலவியே இருந்துள்ளார். அவரை குறைந்தது இன்னுமொரு முஸ்லிம் நபருடன் சந்திப்பதற்குக்கூட விட்டுவைக்கக்கூடாது. அந்த அளவுக்கு குறித்த நபர் மூளைச்சலவை செய்யக்கூடியவர். நௌபர் மௌலவி மிகவும் பயங்கரமானவர். குற்றப் புலனாய்வுப் பிரிவினரைக்கூட மூளைச்சலவை செய்து குழப்பினவர் என்றே நாமல் குமார தெரிவித்திருக்கின்றார்.

Web Design by Srilanka Muslims Web Team