மீண்டும் இஸ்லாத்தை கொச்சைப்படுத்த முனையும் தஸ்லீமா நஸரீன் - Sri Lanka Muslim

மீண்டும் இஸ்லாத்தை கொச்சைப்படுத்த முனையும் தஸ்லீமா நஸரீன்

Contributors

 

 

thasneema0
thasneema3
thasneema1.jpg2
thasneema1

 

முஸ்லிம் விரோதக் கருத்துக்களுடன் தஸ்லீமா நஸரீன் தயாரித்துள்ள ‘துசாஹோபாஸ்’ (Dusahobas) ‘தொலைகாட்சித் தொடர்’ ஒளிபரப்புக்கு மேற்குவங்க முஸ்லிம் அமைப்புக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலை நாட்டு கைக்கூலியான தஸ்லீமா, கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து முஸ்லிம் விரோத கருத்துக்களை எழுதியும் பேசியும் வருகிறார்.

வரும் டிசம்பர் 19ந்தேதி முதல், மேற்குவங்கத்தின் ஆகாஷ் ஆத் (Aakash Aath) என்ற தொலைகாட்சி சேனல் மூலம் ‘துசாஹோபாஸ்’ என்ற சர்ச்சைக்குரிய தொடரை வெளியிட முயன்று வருகிறார், தஸ்லீமா நஸரீன்.

வங்காள தேசத்தில் பிறந்து, 3 கணவர்களை மணந்து அவர்களை விவாகரத்து செய்துவிட்டு இப்போது தனியாக பல நாடுகளில் அகதி போல வாழ்ந்துகொண்டு இருக்கும் தஸ்லீமா,

1994 ல் ‘லஜ்ஜா’ என்ற நாவலில் முஸ்லிம் விரோத விஷமங்களை எழுதியதால் வங்கதேசத்திலிருந்து வெளியேற்றப் பட்டார்.

சில வருடங்களுக்கு முன், 

அப்பாவி மிருகங்களின் ரத்தத்தை கேட்கும் கடவுள் எப்படி சிறந்த கடவுளாக இருக்க முடியும் என்று அறியாத்தனமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

உணவுக்காக அப்பாவி மிருகங்களை கொலை செய்து விட்டு கடவுள் பெரியவன் என்று சொல்வது தேவையில்லாதது என்றும்,

மிருகங்கள் அல்லாஹ்வை நம்பாததால் தான் அவற்றுக்கு இக்கதி என்றும், அவைகளுக்காகத் தான் பரிதாபப்படுவதாகவும் தஸ்லீமா கூறியுள்ளார்.

தன்னை பற்றி ‘நிர்பாசன்’ என்ற சுயசரிதை புத்தகம் எழுதி வந்த அவர்,

இந்த புத்தகத்தின் ஏழாவது பகுதியை, கொல்கட்டா சர்வதேச புத்தக கண்காட்சியில் வெளியிட அனுமதி பெற்றிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு அதிகரித்ததை தொடர்ந்து, கண்காட்சி அமைப்பாளர்கள் புத்தகத்தை வெளியிட அனுமதி அளிக்கவில்லை.

டுவிட்டரில் சமீபத்தில் அவர் வெளியிட்டிருந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பான வழக்கு,

டெல்லி அபெக்ஸ் கோர்ட்டுக்கு நாளை (17/12) வருகிறது என்பதும், இங்கு நினைவுப்படுத்த வேண்டியுள்ளது

 

 

Web Design by Srilanka Muslims Web Team