மீண்டும் சபைக்கு வந்தார் ரணில், இன்று பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்..! - Sri Lanka Muslim

மீண்டும் சபைக்கு வந்தார் ரணில், இன்று பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்..!

Contributors

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி பக்கம் முன்வரிசையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்.

இன்று உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம், ஏற்றுமதி இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் கீழான 2 ஒழுங்குவிதிகளும், அரசாங்கத்தின் அத்தியாவசிய செலவீனங்கள் மற்றும் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடும் விவாதத்துக்கு நாடாளுமன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதனிடையே இன்று காலை 10 மணிக்கு சபை அமர்வுகள் ஆரம்பமானது ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

2020 பொதுத் தேர்தலின் பின்னர் வெற்றிடமான ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை பெயரிடுவதாக கட்சியினர் கடந்த வாரம் ஒரு மனதாக அறிவித்திருந்தனர்.

அந்த அறிவிப்பின் பின்னர் தேசிய தேர்தல் ஆணையகத்தினால் ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினராக அறிவித்து வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டது.

2020 பொதுத் தேர்தலில் 249,435 வாக்குகளைப் பெற்ற பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி தேசிய பட்டியல் ஒரு இடத்தைப் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team