மீண்டும் தனிமைப்படுத்தும் அபாயத்தில் கொழும்பு? - Sri Lanka Muslim

மீண்டும் தனிமைப்படுத்தும் அபாயத்தில் கொழும்பு?

Contributors

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள காரணத்தினால் மீண்டும் தனிமைப்படுத்தும் அபாயத்தில் கொழும்பு மாவட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சித்திரைப் புத்தாண்டின் பின்னர் 8 வீதத்தில் அதிகரித்துள்ளது.

நாட்டில் நேற்று 367 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதோடு அவர்களில் 94 பேர் கொழும்பு மாவட்டத்தில் உள்ளவர்கள்.

இவ்வாறு தொடர்ச்சியாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அபாயகரமான பகுதிகளை மீண்டும் தனிமைப்படுத்தவே நேரிடும் என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team