மீண்டும் பிரதமராகும் எண்ணம் இல்லை: மன்மோகன் - Sri Lanka Muslim

மீண்டும் பிரதமராகும் எண்ணம் இல்லை: மன்மோகன்

Contributors

ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தால் 3ஆவது முறையாகவும் பிரதமராகமாட்டேன் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன்சிங் இன்று புதுடெல்லியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேட்டியளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளில் பல சாதனைகளை செய்துள்ளது. பட்டினி, ஊழலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
உணவு பாதுகாப்பு சட்டமூலம் அனைவருக்கும் உணவு கிடைக்க வழி செய்துள்ளது. பொருளாதார வீழ்ச்சியை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

கிராமப்புற வளர்ச்சி தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 13.8 கோடியாக குறைந்துள்ளது.

 

கல்வியை மேம்படுத்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு துறையில் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது.

 

பிரதமர் வேட்பாளரை உரிய நேரத்தில் காங்கிரஸ் கட்சி அறிவிக்கும். பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் எண்ணம் எழுந்ததில்லை.

 

இதேவேளை, பிரதமராகும் தகுதி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு உள்ளது. நாட்டை இளைய தலைமுறையினர் வழிநடத்துவார்கள்.

 

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். பிரதமராக நேர்மையான முறையில் கடமையாற்றி வருகிறேன்.

 

மேலும், நான்கு மாநிலங்களின் தேர்தல் தோல்விக்கு விலைவாசி உயர்வு காரணமாக இருக்கலாம்.
மத்திய அரசின் 2ஆவது ஆட்சியில் விவசாயத்துறை முன்னேற்றம் அடைந்துள்ளது.

மீண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் 3ஆவது முறையாகவும் நான் பிரதமராகமாட்டேன் என அவர் மேலும் தெரிவித்தார்.(vk)

Web Design by Srilanka Muslims Web Team