மீண்டும் மியன்மார் இஸ்லாமியர்கள் மரண படுகுழிக்கு திரும்ப தயார் இல்லை - ஐ.நா. » Sri Lanka Muslim

மீண்டும் மியன்மார் இஸ்லாமியர்கள் மரண படுகுழிக்கு திரும்ப தயார் இல்லை – ஐ.நா.

rohin

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் மீது மிகக்கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் அவர்கள் நாடு திரும்ப (மரண படுகுழிக்கு திரும்ப )வாய்ப்பில்லை என ஐ.நா. தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ள 5 லட்சம் ரோஹிங்யா அகதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரில், ஐ.நா. மனிதர்கள் உரிமை குழு நடத்திய நேர்காணல் மற்றும் ஆய்வின் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் மனதிலும், உடலிலும் அனுபவித்த வலியிலும், அச்சத்திலும் இருந்து ரோஹிங்யா அகதிகள் இன்னும் மீளவில்லை என்றும், மியான்மர் ராணுவத்தினர் மனித உரிமைகளை மீறி தாக்குதல் நடத்தியிருப்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹிங்யா இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு தப்பியோடும் வகையிலும், அவர்கள் திரும்பிவர நினைக்காத வகையிலும் நன்கு திட்டமிட்டு மிக கொடூர தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஐ.நா.வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka