மீண்டும் வான் வழி ஊடாக பலஸ்தீன் மீது தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல் : வலுக்கிறது போர்..! - Sri Lanka Muslim

மீண்டும் வான் வழி ஊடாக பலஸ்தீன் மீது தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல் : வலுக்கிறது போர்..!

Contributors

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினரின் இலக்குகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதலைத் தொடங்கியிருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று காசா பகுதியில் இருந்து வெடிபொருள்களைக் கொண்ட பலூன்கள் இஸ்ரேலை நோக்கி பறக்கவிடப்பட்டதாகவும், அதனால் பல இடங்களில் தீப்பற்றியதாக இஸ்ரேலிய தீயணைப்புத் துறை தெரிவித்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த மே மாதம் 21-ஆம் திகதிக்குப் பிறகு இந்தப் பிராந்தியத்தில் நடந்த பாரிய மோதலாக கருதப்படுகின்றது.

காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காசா இயக்கத்தின் எச்சரிக்கையை மீறி கிழக்கு ஜெருசலேம் பகுதியில் யூத தேசியவாதிகள் பேரணி நடத்தியதைத் தொடர்ந்து இந்த மோதல் நிலை உருவாகியுள்ளது.

ஹமாஸின் போராளிகளுக்குச் சொந்தமான தளங்கள், அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகள் இஸ்ரேலின் தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் 66 குழந்தைகள் உட்பட 256 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததுடன், 12 இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team