மீதமுள்ள எண்ணெய்க் குதங்களையும் இந்தியாவிடம் ஒப்படைக்க அரசாங்கம் முயற்சி – ஓமல்பே சோபித தேரர்..! - Sri Lanka Muslim

மீதமுள்ள எண்ணெய்க் குதங்களையும் இந்தியாவிடம் ஒப்படைக்க அரசாங்கம் முயற்சி – ஓமல்பே சோபித தேரர்..!

Contributors

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இந்நாட்டின் எண்ணெய்க் குதங்களைப் பரிசோதனை செய்யும் நோக்கத்தில் வந்துள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் திருகோண மலைக்குச் சென்று எண்ணெய்க் குதங்களைப் பரிசோதனை செய்ததன் நோக்கம் மோசடியாக வர்த்தக நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவே என அவர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை எண்ணெய்க் குதங்களில் மீதமுள்ள தைக் கையகப்படுத்தும் நோக்கில் தான் அவர் நாட்டுக்கு வந்ததாக அவர் கேகாலையில் நேற்று(03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

எஞ்சியுள்ள 85 எண்ணெய்க் குதங்களையும் இந்தியாவிடம் ஒப்படைக்க அரசாங்கம் முயற்சிக்கின் றது என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சொத்துக்களை இவ்வாறு கொள்ளை விலை யில் விற்பனை செய்வதற்கு தற்போதைய ஆட்சியாளருக்கு உள்ள உரிமை என்ன?

இந்த நடவடிக்கை மிகப் பெரியதொரு பாவச் செயல், தூர நோக்கற்ற எதேச்சதிகார செயலாகும். தேசிய சொத்துக் கள் கொள்ளையிடப்படுவதற்கு எதிராக மக்கள் அணி திரள வேண்டும்.

எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அரசாங்கம் இந்த விடயங்களைச் செவி சாய்ப்பதில்லை. எதிர்காலத்தில் ஆட்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இல்லை என்றே நினைக்கின்றேன் என அவர் தெரிவித் துள்ளார்.

சோமாலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் எத்தியோப்பியா வுக்கு நேர்ந்த நிலைமையே இலங்கைக்கும் நேரிடும் எனவும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team