மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்மந்தமான கூட்டம் » Sri Lanka Muslim

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்மந்தமான கூட்டம்

u66

Contributors
author image

M.J.M.சஜீத்

அட்டாளைச்சேனை பிரதேச மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைக்குமுகமாக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் றகுமானியாபாத் மீனவர் சங்கக் கட்டிடத்தில் ஏ.கே நிசார்தீன் தலைமையில் நேற்று (10) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ் உதுமாலெப்பை, உதவிப் பிரதேச செயலாளர் ரீ. அதிசயராஜ், மீன்பிடித் திணைக்கள உதவிப் பணிப்பாளர், மின்சார சபை மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள் உட்பட மீனவச் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. ஒலுவில் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் செல்லும் ஆழ்கடல் மீனவர்கள் கடற்படை மற்றும் கரையோரப் பாதுகாப்புப் படையினரால் அண்மைக்காலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் சம்மந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விரைவில் தீர்த்து வைக்கும் பொருட்டு விசேட குழுவொன்றும் இதன்போது நியமிக்கப்பட்டது. இதில் பிரதேச செயலாளர், மீன் பிடித் திணைக்கள உதவிப் பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர்கள், மீனவ சங்கங்களின் தலைவர்கள் உள்ளடங்கப்பட்டுள்ளனர்.

கோணாவத்தை, கப்பலடி, றகுமானியாபாத் போன்ற துறைகளில் ஏற்கனவே கட்டப்பட்ட மீனவ வீடமைப்புத் திட்டங்களை நிறைவு செய்தல், மின்சார மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், ஒலுவில் துறைமுகத்திலிருந்து அக்கரைப்பற்று வரையான கடற்கரை வீதியினை அமைப்பது எனவும் இக்கூட்டத்தின் போது தீர்மானிககப்பட்டது.

u-jpg2

Web Design by The Design Lanka