எல்லை தாண்டி மீன் பிடித்தால் 15 லட்சம் தண்டப்பணம், இரண்டு வருடசிறைத் தண்டனை; விரைவில் புதிய சட்டம் - மீன்பிடி அமைச்சு » Sri Lanka Muslim

எல்லை தாண்டி மீன் பிடித்தால் 15 லட்சம் தண்டப்பணம், இரண்டு வருடசிறைத் தண்டனை; விரைவில் புதிய சட்டம் – மீன்பிடி அமைச்சு

Contributors

மீனவ திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.

மீனவர்கள் கடல் எல்லை தாண்டுதலை தடுப்பதற்காக இந்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்திய, இலங்கை மீனவர் பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில் அது தொடர்பாக நிரந்தர தீர்வு ஒன்றும் இதுவரை முன்வைக்கப்படவில்லை.

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்திய மீனவர்களும் இந்திய கடற்பரப்புக்குள் நுழைந்த இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் மீனவ சட்டம் இலங்கை பாராளுமன்றில் திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்த திருத்த சட்டத்தின் மூலம் பிற நாட்டு கடல் எல்லையில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வந்து சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவ படகின் உரிமையாளரிடமிருந்து 15 லட்சம் ரூபா தண்டப்பணம் வரையில் அறவிடவுள்ளதுடன் இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனையும் வழங்கப்படும் என மீன் பிடி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்ட மீனவர்கள் கைதான காலத்திலிருந்து இரண்டு வருடங்கள் மீனவ நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இலங்கை மற்றும் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ததன் பின்னர் இந்த திருத்தச் சட்டம் குறித்து ஆராயவுள்ளதாக மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது. (ad)

Web Design by Srilanka Muslims Web Team