மீள்குடியேறிய யாழ் முஸ்லிம்கள் தங்க இடமின்றி அவதி (புகைப்படம்) - Sri Lanka Muslim

மீள்குடியேறிய யாழ் முஸ்லிம்கள் தங்க இடமின்றி அவதி (புகைப்படம்)

Contributors

-பா.சிகான்-

 

மீளக்குடியமர்ந்து கதீஜா பாடசாலையில் தங்கியிருந்த முஸ்லீம் மக்களை உடனடியாக வெளியேறுமாறு யாழ் பிரதேச செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

 
இதன் காரணமாக அங்குள்ள மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தமக்கு மாற்று இடமொன்றை வழங்கியுதவுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கோரி நிற்கின்றனர்.

 
சுமார் 15 குடும்பங்கள் இப்பாடசாலையில் 4 வருடங்களுக்கு மேலாக எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களை இதுவரை காலமும் அரசியல் தேவைக்காக இங்குள்ள சிலர் பாவிப்பதாகவும், இதனை பலமுறை ஊடகங்கள் வாயிலாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்ததாக அங்கு சென்ற எமது செய்தியாளரிடம் மக்கள் தெரிவித்தனர்.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ் பிரதேச செயலாளரின் கையொப்பத்துடன் கூடிய அறிவித்தல் துண்டொன்றினை  இப்பாடசாலையில் கிரமசேவகர் ஒட்டிச்சென்றுள்ளார்.

 

அதில் குறிப்பிட்டுள்ளதாவது இங்கு நீங்கள் (மக்கள்) தங்கியிருக்கும் பாடசாலை கட்டடம் பாதுகாப்பற்றது. ஆகவே இதில் தங்கியுள்ளவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர இத்துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்ட நாளில் இருந்து அப்பாடசாலை நோக்கி அளவையாளர்கள் என கூறி இனந்தெரியாத நபர்கள் வந்து செல்வதாக அங்குள்ளவர்கள் குறிப்பிடுகின்றனர்.

 
ஆனால் இத்திடீர் வெளியேற்றமானது இப்பகுதியில் தமிழ் பாடசாலை ஒன்றினை நிர்மாணித்து உடனடியாக இயங்க வைக்க பிரதேச செயலாளர் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

 
ஏனெனில் ஏலவே இப்பிரதேசத்தில் மீளகுடியேறி தங்கியிருந்த மக்களை அவசரமாக மேற்படி பிரதேச செயலாளர் வெளியேற்றி தமிழ் ஆரம்ப பாடசாலை ஒன்றினை ஆரம்பிக்க இருந்தார். ஆயினும் யாழ் முஸ்லீம்களின் விழிப்புணர்வினால் குறித்த பிரதேச செயலாளரின் திட்டம் தடுக்கப்பட்டதுடன், தற்போது மன்உல்பாம் மத்ரஸா எனும் பெயரில் இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.(meep)

 

Jaffna Muslim3

Jaffna Muslim4

Jaffna Muslim5

Jaffna Muslim1

Web Design by Srilanka Muslims Web Team